பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி தெலங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் மரம் நடும் #GreenIndiaChallengeஐ சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்தச் சேலஞ்சில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, மரக்கன்றுகள் நடுவதற்குப் பிறரையும் தூண்ட வேண்டும்.
இந்த சேலஞ்சானது திரைப்பிரபலங்களிடம் பிரபலமாகியுள்ளது. தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு தொடங்கி தளபதி விஜய் வரை இந்த சேலஞ்சை ஏற்று செய்து முடித்துள்ளனர். அதே போல் நடிகைகள் ஷ்ருதி ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, ராஷி கண்ணா உள்ளிட்டோரும் செய்து முடித்தனர்.
இந்நிலையில், தற்போது இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இந்த சேலஞ்சை செய்து முடித்துள்ளார். நடிகர் ஜெய்பிரகாஷ் விடுத்த சாவலை ஏற்றுக் கொண்டு சசிகுமார் இதைச் செய்து முடித்துள்ளார். தற்போது இவர் இந்த பசுமை இந்தியா சேலஞ்சை நடிகர் சமுத்திரக்கனி, நடிகைகள் நிக்கிலா விமல், அஞ்சலி ஆகியோருக்கு விடுத்துள்ளார்.