தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தளபதி 64' படத்தில் இணைந்த பிரபலங்களின் பட்டியல் வெளியீடு - Actor and actress list revealed of thalapathy 64

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 64' படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகர் நடிகைகளின் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது.

thalapathy-64
thalapathy-64

By

Published : Dec 18, 2019, 3:12 PM IST

நடிகர் விஜய்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் 'தளபதி 64' படம் உருவாகிவருகிறது. மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்யுடன் கைகோர்த்துள்ள லோகேஷ் கனகராஜ் ஆக்‌ஷன்-திரில்லர் கதைக்களத்தில் இப்படத்தை இயக்குகிறார்.

'தளபதி 64' படத்தில் விஜய் சேதுபதி, கைதி பட வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடிக்கின்றனர்.

எக்ஸ்.பி. பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்ய சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்து நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது நடிகர், நடிகைகளின் முழு பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • https://twitter.com/XB_Britto/status/1206880718183227395

அதன்படி, நடிகர் நாசர், ராஜேஷ், மகாநதி சங்கர், அழகம்பெருமாள், சுனில் ரெட்டி, நாகேந்திர பிரசாத், சேத்தன், மாத்யு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க...

'தர்பார்' - 'தலைவர் 168' - ரஜினியை ஆக்கிரமிக்கும் சன் டிவி

ABOUT THE AUTHOR

...view details