பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஆனந்தராஜ் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தனிப்பட்ட முறையில் கட்சியின் சார்பில் என் இல்லத்தில் அவரது திருவுருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
அண்ணாவின் பிறந்தநாளில் உறுதிமொழியாக நீண்ட வருடமாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணாவின் பிறந்த நாளில் இந்த 7 பேர் விடுதலை ஆவதற்கான அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிபந்தனையின் பேரிலாவது அந்த 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்.
பேரரிஞர் அண்ணா திருஉருவ படத்துக்கு நடிகர் ஆனந்தராஜ் மரியாதை பேனர் வைத்ததால் ஒரு இளம்பெண் உயிர் இழந்துள்ளார். அவர் குடும்பத்திற்கு என்ன கொடுத்தாலும் ஈடாகாது. பேனர் இனி வேண்டாம் என்றும் நடிகர் அஜித், விஜய், சூர்யா போன்றோர் வரவேற்றுள்ளதை நானும் வரவேற்கிறேன். நடிகர்கள் மட்டும் அல்லாமல் அரசியல் கட்சிகளும் இதனை கடைபிடிக்க வேண்டும், என்றார்.
பேனர் கலாச்சரம் குறித்து நடிகர்களின் முடிவு வரவேற்கத்தக்கது அதிமுகவில் இருந்து திமுகவுக்கு இணைப்பவர்கள் குறித்து பேசிய ஆனந்தராஜ், அவர்கள் எடுக்கும் முடிவுதான் சரியானது என்பேன். அவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. அவர்களுக்கான மரியாதை தேடி சென்ற செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரை வரவேற்கிறேன் என்றார். அப்போ நீங்கள் திமுக வில் இணைய வாய்புள்ளதா என்ற கேள்விக்கு, இதுவரையில் நான் அண்ணா திமுக காரனாகத்தான் இருக்கிறேன் என்று பதிலளித்தார்.
பாஜக மூத்த தலைவர் அமித்ஷா இந்தி திணிப்புக்கான ட்விட்டர் கருத்து குறித்த கேள்விக்கு, தாய்மொழி தமிழை அவமதிக்க ஒருபோதும் விடமாட்டேன், கல்தோன்றி மன்தோன்றா காலத்தில் பிறந்த தமிழை தவிர்த்து, இந்தி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இருமொழி கொள்கைதான் என்றும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். இந்தி வேண்டும் என்றால் தேவைப்படுபவர்கள் கற்று கொள்ளலாம் என்றார்.
ஹிந்தி மொழி திணிப்பு குறித்து ஆனந்தராஜ் கருத்து தொடர்ந்து பேசிய அவர், நான் அதிமுகவுக்கு தொண்டு செய்ய வந்தவன். ஏற்கனவே நான் மக்களிடம் சென்று தொண்டு செய்து விட்டேன். நான் ஜெயலலிதாவால் மக்களிடம் அடையாளம் காட்டபட்டவன். மேலும், 2021ஆம் ஆண்டில் நடைபெறக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி மக்கள் பணியை ஆற்றினால் வரவேற்கதக்கது. நடிகராக இருந்து ஒரு கட்சியின் இளைஞர் அணி தலைவராக பொறுபேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு என் வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.