புதுச்சேரி திருமுடி நகரைச் சேர்ந்த கனகசபை திரைப்பட நடிகர் ஆனந்த் ராஜ் சகோதரர் ஆவார். திருமணம் செய்து கொள்ளாமல் வட்டிக்கு பணம் கொடுப்பது, மாதச்சீட்டு பிடிப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டு தனியே வாழ்ந்து வந்த கனகசபை, தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்ட கனகசபையின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது அண்ணன் ஆனந்த் ராஜ், இன்று புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”எனது தம்பி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். தம்பியின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதிய நான்கு கடிதங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவருக்கு யாரோ மிரட்டல் விடுத்துள்ளனர்.