தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தவர் ஆனந்த்ராஜ். தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 'ஜே.கே.ரித்தீஷ் மரணம் என்னை மிகவும் பாதித்தது. ஸ்டெர்லைட், மீத்தேன், நீட் என எந்த தமிழக பிரச்சினைகள் குறித்தும் தேசிய கட்சிகளிடம் தமிழக கட்சிகள் எந்தவித உறுதியையும் பெற வில்லை. இதனால், நோட்டாவிற்கு வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய போகிறேன். நோட்டாவிற்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை. ஆனால் ஏன் அதற்கு இவ்வளவு வாக்குகள் வந்தது என்று தேர்தல் ஆணையம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
சாதிக்கட்சி தொடங்க இருக்கும் வில்லன் நடிகர்?
சென்னை: செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஆனந்த்ராஜ் தனது சாதிப்பெயரை குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நான் நோட்டாவின் வேட்பாளர் எனக்கு தமிழக மக்கள் பெருவாரியான ஆதரவு தரவேண்டுகிறேன். சரத்குமார் போன்ற கட்சி தலைவர்கள் சாதி அடிப்படையில்தான் அரசியல் செய்கின்றனர். நான் முதலியார் இனத்தைச் சார்ந்தவன். என் இனம் சார்ந்த மக்களும் நான் வாக்குக் கேட்கும் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியும் சாதி பாராமல் இங்கு அரசியல் செய்யவில்லை. எனவே, நானும் இனத்தை அடையாளப்படுத்தும் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்போம் என அதிமுக கூறுகிறது. இது நிச்சயமாக தவறான செயல், அதிமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனக் கூறினார்.
இதையடுத்து, நீங்களும் சாதி அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர், அதற்கு ஆனந்தராஜ் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.