தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மிரட்டும் லுக்கில் அல்லு அர்ஜுன் - புஷ்பா ட்ரெய்லர் வெளியீடு - புஷ்பா ட்ரெய்லர்

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Pushpa
Pushpa

By

Published : Dec 7, 2021, 8:57 AM IST

'அலா வைகுந்தபுரமுலோ' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'புஷ்பா'. 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புஷ்பா படத்தில் பன்வார் சிங் ஷெகாவத் (ஐபிஎஸ்) கதாபாத்திரத்தில் மொட்டைத் தலையுடன் ஆக்ரோஷமாக ஃபகத் பாசில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா' படத்தின் ட்ரெய்லர் நேற்று (டிசம்பர் 6) வெளியானது. செம கலர்ஃபுல்லாக இருக்கும் ட்ரெய்லர் மூலம் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரராக நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி 'புஷ்பான்னா Flower-னு நெனச்சீங்களா? fire' என்று அல்லு அர்ஜுன் பேசியுள்ள வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பாகம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகிறது.

இதையும் படிங்க:மாநாடு படத்தைப் பாராட்டிய பிரமாண்ட இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details