தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பட புரமோஷனில் தள்ளுமுள்ளு - அல்லு அர்ஜுன் வருத்தம் - latest cinema news

நடிகர் அல்லு அர்ஜுன் தனது படத்தின் புரமோஷன் விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்

By

Published : Dec 14, 2021, 1:16 PM IST

தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தைக் காண அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இதனிடையே புஷ்பா திரைப்படம் வெளியாக இன்னும் ஒருசில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி படத்தின் புரமோஷன் பணிக்காக நேற்று (டிசம்பர் 13) நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில் அல்லு அர்ஜுனைக் காண ஏராளமான ரசிகர்கள் சென்றுள்ளனர். 200 பேர் செல்ல வேண்டிய இடத்திற்கு 2000 ஆயிரம் பேர் சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். இதனால் அல்லு அர்ஜுன் விழாவை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் படத்தின் புரமோஷன் விழாவில் எதிர்பாராத விதமாக ரசிகர்கள் காயமடைந்ததாக கேள்விப்பட்டேன். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். என் மீதான உங்களின் அன்பு தான் எனது பெரிய சொத்து. அதை நான் எப்போது தவறாக உபயோகப்படுத்த மாட்டேன்" என்றார்.

இதையும் படிங்க:'ஏ சாமி...' - வெளியீட்டுக்கு முன்பே ரூ.250 கோடி வசூல் செய்த 'புஷ்பா: தி ரைஸ்'!

ABOUT THE AUTHOR

...view details