தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'புஷ்பா' படக்குழுவுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கிய அல்லு அர்ஜுன் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகர் அல்லு அர்ஜுன், 'புஷ்பா' வெளியாவதற்கு முன்பே படக்குழுவினருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளார்.

புஷ்பா
புஷ்பா

By

Published : Dec 10, 2021, 2:15 PM IST

'அலா வைகுந்தபுரமுலோ' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'புஷ்பா'. 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன், 'புஷ்பா' படக்குழுவைச் சேர்ந்த 40 பேருக்கு தலா 11 கிராம் மதிப்புள்ள தங்க நாணயத்தைப் பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி தயாரிப்புப் பணியாளர்களுக்கும் 10 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.

ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ், அஜய் கோஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பகுதி வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க:மிரட்டும் லுக்கில் அல்லு அர்ஜுன் - புஷ்பா ட்ரெய்லர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details