தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிகர்கள் படம் பார்க்க புதிய மொபைல் ஆப் உருவாக்கிய ஜெய் ஆகாஷ் - ஜெய் ஆகாஷ்

நடிகர் ஜெய் ஆகாஷ் ரசிகர்கள் படம் பார்ப்பதற்காக புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் படம் பார்க்க புதிய மோபைல் ஆப் உருவாக்கிய ஜெய் ஆகாஷ்
ரசிகர்கள் படம் பார்க்க புதிய மோபைல் ஆப் உருவாக்கிய ஜெய் ஆகாஷ்

By

Published : Mar 18, 2020, 11:49 AM IST

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஜெய் ஆகாஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது 'அடங்காத காளை' என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து, இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இவர் ரசிகர்கள் படம் பார்க்க 'A Cube ' என்ற புதிய மொபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ''இந்தப் படத்தை வெளியிட ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம். இதன்முலம் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த,எளிய வழியாக இருக்கும்.

இந்த ஆப்பை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். இந்த ஆப்பில் வாரவாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது “அடங்காத காளை” படம் வெளியாகிறது. இந்த ஆப்பின் சிறப்பு என்னவென்றால், படத்தை நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த ஆப்பில் இரண்டு நாட்கள் வரை பார்த்து கொள்ளலாம்.

ரசிகர்கள் படம் பார்க்க புதிய மோபைல் ஆப் உருவாக்கிய ஜெய் ஆகாஷ்

எனது அடுத்த படமான 'புதிய மனிதன்', இந்த ஆப்பில் வெளியாகவுள்ளது. இதுதவிர வேறு பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த A Cube ஆப்பில் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகும். ஆனால் இந்த A Cube ஆப்பில் நீங்கள் மிக குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும் சேர்ந்து பார்க்க முடியும்'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details