விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் 'வலிமை' திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வுப் பணிகளில் இயக்குநர் ஹெச். வினோத் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே அஜித்தின் மனைவி ஷாலினி நேற்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பர்த் டே பார்ட்டியில் கலந்துகொண்ட அஜித்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.