சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு, அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று அஜீத் வீடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் அது புரளி என தெரியவந்தது.
தல வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!
19:21 May 31
இருப்பினும், அஜித் குமார் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து தேடிய போது வழக்கமாக மிரட்டல் விடுக்ககூடிய மனநலம் பாதிக்கப்பட்டவரான மரக்காணத்தை சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது. புவனேஷை பிடிக்க விழுப்புரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பசித்தால் எடுத்துக்கொள்: ஆதரவற்றவர்கள் உணவருந்த உதவிய அஜித் ரசிகர்கள்!