தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாஸான லுக்கில் அஜித்...ரசிகர்கள் கொண்டாட்டம்... - வலிமை படம்

நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

ஸ்டைலிஷான லுக்கில் அஜித்
ஸ்டைலிஷான லுக்கில் அஜித்

By

Published : Mar 3, 2022, 12:41 PM IST

Updated : Mar 3, 2022, 12:59 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.

இப்படம் 5 நாள்களில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் கூட்டணியில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

குடும்பத்துடன் நடிகர் அஜித்

இதற்கிடையில் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது குடும்பத்தினருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்டைலிஷான லுக்கில் அஜித்

அந்த புகைப்படங்களில் நீளமான தாடியுடன் செம்ம ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார் அஜித். அவருடன் மனைவி ஷாலினி , மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் உடனிருக்கின்றனர். இந்த கெட்டப்பை பார்த்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Last Updated : Mar 3, 2022, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details