தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் திரையில் அறிமுகமாகி 29ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 30ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
ரசிகர்களால் அன்போடு தல என அழைக்கப்படும் இவருக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் குறித்த ஒரு புகைப்படம், வீடியோ, பட அப்டேட் என எது வெளியானாலும் அது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது வழக்கம்.
அந்தவகையில் அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்காக, பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தல அஜித் சரியாகக் குறிபார்த்துச் சுடுவது போன்ற காட்சி அமைந்துள்ளது. கருப்பு உடையில் மிகவும் மாஸாக இருக்கும் அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.