25 லட்சம் நிதி வழங்கிய நடிகர் அஜித்! - tamil news
![25 லட்சம் நிதி வழங்கிய நடிகர் அஜித்! Actor Ajith Kumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11754714-thumbnail-3x2-ajith.jpg)
10:38 May 14
தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித்குமார் ரூ. 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக நிதி தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, தற்போது நடிகர் அஜித்குமார் கரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்