புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (அக்.29) உயிரிழந்தார்.
புனித் ராஜ்குமார் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு தனது மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுரேஷ் சந்திரா தனது ட்விட்டரில், " அஜித் குமாரின் இரங்கல் செய்தி, ஸ்ரீ புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இந்த துயரத்தில் இருந்து அவர்கள் மீண்டுவர தேவையான வலிமைய பெறட்டும். அஜித் குமார் - ஷாலினி அஜித் குமார்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கதையின் நாயகன்...புனித் ராஜ்குமார் கடந்து வந்த பாதை...