இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'பூமாரங்'. இப்படத்தில் மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்துள்ளார். மார்ச் 1ஆம் தேதி வெளியான பூமாரங் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஒடிக்கொண்டிருக்கிறது.
விவசாயத்தையும், தண்ணீரின் அவசியத்தை பற்றியும் தற்போதைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும், 'பூமாரங்' படத்திற்காக கதையின் நாயகன் அதர்வா முகத்தில் தீக்காயம் ஏற்பட்டதுபோல் ஒருசில காட்சிகளில் நடித்திருப்பார். அந்தக் காட்சிகள் படத்திற்கு உயிரோட்டமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.