தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் சாம் ஆண்டனுடன் மீண்டும் இணைகிறார் அதர்வா - தமிழ் சினிமா செய்திகள்

சென்னை: இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டும் ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படத்தில் இணைகிறது.

அதர்வா
actor adharva

By

Published : Feb 7, 2021, 4:16 PM IST

“100” திரைப்படம் மூலம் ஹிட்டடித்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்ஷன் படத்தில் இணைய உள்ளது. “மாறா” திரைப்படத்தினை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் (Pramod Films) தயாரிப்பாளர் சுருதி நல்லாப்பா இப்படத்தினை தயாரிக்கிறார்.

நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையப்படுத்தி ஆக்ஷன்-திரில்லர் பாணியில் உருவாகிறது. பல புதுமையான காட்சிகள் படத்தில் இடம்பெற இருக்கின்றன.

இப்படத்தின் காட்சிகளுக்காக நடிகர் அதர்வா சிறப்பு பயிற்சிகளைக் கற்று தயாராகிவருகிறார். படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” படம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த இசையமைப்பாளர் ஜிப்ரானை, இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர் படக்குழுவினர். படத்தொகுப்பிற்கு ரூபன், ஒளிப்பதிவிற்கு கிருஷ்ணன் வெங்கட் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இணையவழி குற்றங்கள்தான் (Dark Web) இப்படத்தின் பின்னணி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் மட்டுமல்லாமல் நகைச்சுவையும் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது. பிரதீக் சக்ரவர்த்தி, சுருதி நல்லப்பா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முழுமையான நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:பனையூரில் ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய விஜய்!

ABOUT THE AUTHOR

...view details