தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதிலும் மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது.
இதற்கிடையே, ஆனையூர் பகுதியில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவித்துவரும், ஈழ அகதிகள் முகாமில் வாழும் தமிழர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு நடிகர் அபி சரவணன் பல்வேறு தரப்பினருடன் இணைந்து உதவி செய்தார்.
சுமார் 400 குடும்பங்கள் மற்றும் திருநங்கைகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அபி சரவணன்வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க:ராகவா லாரன்ஸ் வீட்டு முன்பு குவிந்த 20 நபர்கள்; நடந்தது என்ன?