தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'டான்சிங் ரோஸ் என் மாணவர்' - பிக்பாஸ் ஆரி - actor aari latest movies

எல்.வி.பிரசாத் ஃபிலிம் மற்றும் டிவி அகாடமியின் மாணவர்களுக்கு நடிகர் ஆரி அர்ஜுன் நடிப்பு பயிற்சி கொடுத்தார்.

ஆரி
ஆரி

By

Published : Aug 5, 2021, 2:12 PM IST

நடிகர் ஆரி அர்ஜுனன் கடந்த 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் எல்.வி.பிரசாத் ஃபிலிம் மற்றும் டிவி அகடமியில் பயிலும் மாணவர்களுக்கு, நடிப்புக்கான பயிற்சி வகுப்பை எடுத்துள்ளார். இதில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியில் இந்த ஆண்டுதான் நடிப்பு பயிற்சி தொடங்கியது. இந்த முதலாம் ஆண்டு மாணவர்கள்தான் நாளைய வெள்ளித்திரையில் ஜொலிக்க போகும் நட்சத்திரங்கள். அவர்களை இப்போதே பார்த்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவர்களுக்குப் பயிற்சி அளித்தது எனக்கு உற்சாகமாக இருந்தது. மேலும் நமக்குத் தெரிந்ததை மற்றவருக்குச் சொல்லிக் கொடுக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் மிகப் பெரியது.

மறக்க முடியாத நினைவு

நடிப்பு பயிற்சி அளிக்கும் ஆரி

நான் நடிப்பு பயிற்சியாளனாக எனது பயணத்தை 'இனிது இனிது'2 திரைப்படத்தில் தொடங்கினேன். காலப்போக்கில் நான் நடிகனாக மாறியதால், அதிலிருந்து பல ஆண்டுகள் விலகி இருந்தேன். இப்போது சிறப்பு நடிப்பு பயிற்சியாளராக இந்த அகாடமியில் வகுப்பு எடுத்தது எனக்கு மறக்க முடியாத ஒரு நினைவாக இருக்கும் என நம்புகிறேன்.

டான்சிங் ரோஸ் என் மாணவர்

சான்றிதழ் கொடுத்த ஆரி

இப்போது 'சார்ப்பட்டா பரம்பரை' படத்தில் டான்சிங் ரோஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் எனது மாணவர். அவரை திரையில் காணும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த அகாடமியிலிருந்து செல்லும் மாணவர்கள் யாரேனும் நாளை வெள்ளித்திரையில் ஜொலித்தால், அவர்களது பெற்றோர்களைவிட நான் அதிகம் சந்தோஷப்படுவேன்.

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துக

மேலும் மாதா,பிதா,குரு, தெய்வம் என்று சொல்வார்கள். ஒரு குருவாக நான் மாணவர்களுக்குச் சொல்வது என்னவென்றால், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நான் சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும்போது நிறைய நேரங்கள் விரயமானது. இந்த நேரத்தில் நான் 'இனிது இனிது' திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்க்கும், இயக்குநர் குகனுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நடிப்பு பயிற்சி அளித்த ஆரி

உங்களுக்குள் இருக்கும் நடிகனை வெளிக்கொண்டு வருவதுதான் இந்த பயிற்சி வகுப்பு. இப்படியான பயிற்சி வகுப்பு எடுத்து நிறைய காலங்கள் ஆனாலும், இப்போது அதை மீண்டும் மற்றவர்களுக்கு கற்றுத் தருவதில் மிகப்பெரிய சந்தோஷம் இருக்கிறது. இப்படி ஒரு நடிப்பு பயிற்சி வகுப்பெடுக்க அழைத்த எல்.வி.பிரசாத் குழுவினருக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:படப்பிடிப்பில் விபத்து - சேரனுக்கு 8 தையல்

ABOUT THE AUTHOR

...view details