தமிழ் மொழியின் தொன்மையை இப்போதுள்ள தலைமுறையினர் அறிந்திடும் வகையில் 'தமிழ் மொழி' என்ற தலைப்பில் நடிகர் ஆரி ஒரு குறும்படத்தை தயாரித்துள்ளார். இக்குறும்படத்தை குரு. N. நாராயணன் இயக்கியிருக்கிறார். சத்யா இசையமைத்துள்ள இக்குறும்படத்துக்கு தில் ராஜூ ஒளிப்பதிவும், எடிட்டர் சாபு ஜோசப் படதொகுப்பும் செய்துள்ளார்.
உலக தமிழ் சங்க மாநாட்டில் ஆரியின் குறும்படம்! - தமிழ்
தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில் நடிகர் ஆரி குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.
aari
இக்குறும்படம், சிகாகோவில் நடைபெறும் உலக தமிழ் சங்க மாநாட்டில் சிறப்பு காட்சியாக திரையிடப்படவுள்ளது.இந்த மாநாடு 'கீழடி நம் தாய்மடி' என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பேராசிரியர் சாலமன் பாப்பையா, ராஜா, சீர்காழி சிவசிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.