நடிகர் ஆரி இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் உருவான 'ரெட்டச்சுழி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'மாலை பொழுதின் மயக்கத்திலே', 'நெடுஞ்சாலை', 'மாயா' போன்ற திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்தில் காணப்பட்டார். தற்போது 'அலேக்கா' என்னும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்துவருகிறார்.
தற்போது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் ஆரி. அதன்படி தனது பெயரை ஆரி அருஜூனா (Aari Arujuna) என மாற்றியுள்ளதாக குறிப்பிட்ட ஆரி, வரும் புத்தாண்டு முதல் வெளியாகும் தனது புதிய படங்களிலும் தன்னுடைய புது பெயரே குறிப்பிடப்படும் எனவும் தெரிவித்தார்.