அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, இஷா தல்வார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் 'ஆர்ட்டிக்கிள் 15'. ரசிகர்களாலும், திரை விமர்சகர்களாலும் இந்த படம் பெரிதும் பாராட்டப்பட்டது.
'ஆர்ட்டிக்கிள் 15' தமிழ் ரீமேக்: உதயநிதியுடன் கைக்கோர்க்கும் ஆரி! - actor Aari arujunan Movies
உதயநிதி நடிக்கும் புதிய படமான 'ஆர்ட்டிக்கிள் 15' தமிழ் ரீமேகில் நடிகர் ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Article15
தற்போது இந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை பிரபல பாடகரும், 'கனா' படத்தின் இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த படத்தை ரோமியா பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.
பே வியூ புரோஜக்ட் எல்எல்பி மற்றும் ஸீ ஸ்டுடியோ நிறுவனங்கள் படத்தை இணைந்து வழங்குகின்றனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிகர் ஆரி தற்போது இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.