ஒவ்வொரு ஆண்டும் மே 2ஆவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இன்று (மே10) சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திரையுலக பிரபலங்கள் சிலர் தங்களது அம்மா குறித்த அனுபவங்களை, ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
’தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம்’ - நடிகர் ஆரி வாழ்த்து! - latest cinema news
சென்னை: நடிகர் ஆரி அர்ஜுனா அன்னையர் தின வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் நடிகர் ஆரி அன்னையர் தின வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மண்ணில் யார் இல்லை என்றால் நாம் பிரவேசத்திருக்க முடியாதோ, யாரை இழந்து விட்டால் மீண்டும் பெற இயலாதோ அவள் பெயர் தான் தாய் என்று விவேகானந்தர் சொல்லி இருக்கிறார்.
பிள்ளைகளைப் பொறுத்தவரை வீட்டில் விருப்பப்பட்ட உணவு இருந்தால் வீட்டில் சாப்பிடுவோம், அப்பாக்களை பொறுத்தவரையில் உணவு ருசியாக இருந்தால் வீட்டில் சாப்பிடுவார். ஆனால் நம் அம்மாவைப் பொறுத்த வரையில் வீட்டில் மிச்சம் இருந்தால் மட்டுமே உணவை உண்ணுபவள். உலகத்திலேயே தனக்காக சொத்து சேர்க்காத அப்பாக்களும், தனக்காக சமைக்காத தாயும் உண்டென்றால் அது நம் மண்ணில்தான். அந்தப் பெருமை எப்பவும் நம்ம இந்தியாவுக்கு உண்டு. தாயை மறவாமல் இருப்போம், தாய்மையை போற்றுவோம். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று பேசியுள்ளார்.
இதையும் படிங்க:'என் தாய் ஒரு தேவதை’- நடன இயக்குநர் ராதிகா