தமிழ்த் திரைத் துறையில் ஹிப்ஹாப் ஆதி இசை அமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். அதன்பின் 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆதி நடிப்பில் உருவாகிவரும் அன்பறிவு படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அஸ்வின் ராம் இயக்கும் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி, முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.