'மிருகம்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. தொடர்ந்து ஈரம், அய்யனார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில், சாலையோரத்தில் இருக்கும் முதியவர்களிடம் ரகளை செய்யும் வீடியோ ஒன்றை ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சாலையோர முதியவரிடம் ரகளை செய்யும் ஆதி! - Kollywood news
நடிகர் ஆதி சாலையோரத்தில் இருக்கும் முதியவரிடம் ரகளை செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![சாலையோர முதியவரிடம் ரகளை செய்யும் ஆதி! ஆதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:58:54:1595680134-aadhi-2507newsroom-1595680121-1084.jpg)
ஆதி
அந்த வீடியோவில், சாலையோரத்தில் ஒருவர் இருக்கிறார். அவரைக் கண்ட ஆதி தனது காரிலிருந்து இறங்கி, சண்டை போடுவது போல சேட்டை செய்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவரை நான் தினமும் என் வீட்டின் அருகே பார்ப்பேன். அதனால்தான் ஹாய் சொல்வதற்காக இன்று காரில் இருந்து இறங்கினேன். காசு, பணம் தேவையில்லை தலைவா... உன் அன்புக்கு நான் அடிமை" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.