தமிழில் மிருகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆன ஆதி, ஈரம், மரகத நாணயம் ஆகியப் படங்கள் மூலம் பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் கிளாப் படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவருக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்? - நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்?
நடிகை நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை விரைவில் திருமணம் செய்துகொள்ளயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி விரைவில் திருமணம்?
இருவரும் இணைந்து மரகத நாணயம் திரைப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நெருக்கமான குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறுகிறார்கள்.
இதையும் படிங்க:சன்னி லியோன் ரசிகர் செய்த காரியத்தைப் பாருங்க!