தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' வெளியீடு தேதி ஒத்திவைப்பு - acharya release date

சிரஞ்சீவி நடித்துள்ள 'ஆச்சார்யா' படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆச்சார்யா
ஆச்சார்யா

By

Published : Apr 27, 2021, 12:36 PM IST

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். ராம் சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படம் மே மாதம் 13ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 'ஆச்சார்யா' திரைப்படம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் புதிய வெளியீடு தேதி, நிலைமை இயல்பானதும் அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பாலிவுட்டில் பிஸியாகும் ராஷ்மிகா

ABOUT THE AUTHOR

...view details