தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அக்‌ஷரா ஹாசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்ட விஜய் சேதுபதி! - அக்ஷரா ஹாசனின் படங்கள்

சென்னை: அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

அக்ஷரா ஹாசன்
அக்ஷரா ஹாசன்

By

Published : Sep 15, 2020, 1:43 PM IST

தென்னிந்திய டிஜிட்டல் தளமான ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ராஜமூர்த்தி இயக்கத்தில், நடிகை அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.
இதுகுறித்து, இயக்குநர் ராஜா ராமமூர்த்தி கூறுகையில், “முதலில் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'படத்தின் தலைப்பை வெளியிட்டு தந்த விஜய் சேதுபதிக்கு நன்றி.
சமூகத்தை பொறுத்தவரை 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' எனும் நான்கு பண்பும் ஒவ்வொரு நல்ல பெண்ணும் கொண்டிருக்க வேண்டிய தகுதியாக கருதப்படுகிறது.
எங்கள் படம் தலைப்பின் வழியே ஒரு பெண்ணை எது நல்லவள் ஆக்குகிறது எனும் கேள்வியை ஒரு பெண்ணின் பார்வையில் கேட்கிறது. இதில் அதிக அளவில் பெண்கள் நடித்துள்ளனர்.
அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல பாடகி உஷா உதுப் அவருக்கு பாட்டியாக நடிக்கிறார். இவர்களோடு மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details