தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

"சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்"? - தன்னை கலாய்த்தவருக்குத் தக்க பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன்! - Latest cinema news

நடிகர் அபிஷேக் பச்சன் தன்னை கலாய்த்த நெட்டிசனுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

By

Published : Aug 1, 2020, 10:14 PM IST

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் குணமாகி வீடு திரும்பினர். மேலும் தற்போது அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில், "உங்கள் அப்பா மருத்துவமனையில் இருப்பதால், நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். அவர் அபிஷேக் பச்சனை மறைமுகமாக அப்பாவின் சம்பாத்தியத்தில் வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அபிஷேக் பச்சன், "அப்பாவும், நானும் சேர்ந்து தான் மருத்துவமனையில் சாப்பிடுகிறோம். எங்களுடைய நிலைமை உங்களுக்கு வர வேண்டாம் என்று இறைவனிடம் நான் பிரார்த்திக்கின்றேன்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details