'கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி, நடித்த திரைப்படம் 'ஒத்த செருப்பு'. இப்படத்தை பார்த்திபன் தனி ஆளாக நடித்து, இயக்கி, தயாரித்து தன் முயற்சியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. இதனையடுத்து 'ஒத்த செருப்பு' திரைப்படம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியில் பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் இப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.