கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக பல்சர் சுனி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் கூறி மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நடிகை கடத்தல் வழக்கில் தவறுதலாக சிக்கவைக்கப்பட்டுள்ளேன் எனவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியாகக் கூறப்படும் நடிகையின் காணொலி பிரதியை வழங்கினால் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கைவைத்தார் நடிகர் திலீப். ஆனால் இதனை ஏற்க மறுத்து, திலீப்பின் கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரித்தது.