தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அந்தத் தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன் - ஆத்மிகா - மீசையை முறுக்கு நாயகி ஆத்மிகா

இந்தி தெரியாதால் பாலிவுட் படவாய்ப்பு ஒன்றை இழந்துள்ளதாக நடிகை ஆத்மிகா கூறியுள்ளார்.

Aathmika
Aathmika

By

Published : May 15, 2020, 11:56 PM IST

'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. இதைத்தொடர்ந்து அரவிந்த் சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நரகாசூரன்' படத்தில் நடித்திருந்தார். ஆனால் சில பிரச்னைகளால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. வைபவ், வரலட்சுமி ஆகியோருடன் 'காட்டேரி', உதயநிதியுடன் 'கண்ணை நம்பாதே', விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என ஆத்மிகா பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராஞ்சனா படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கும் படத்தில் நடிக்க ஆத்மிகாவுக்கு வாய்ப்பு வந்தது. தமிழ், இந்தி பேசத்தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அந்த வாய்ப்புக்கு ஓகே சொல்ல முடியாமல் போனது.

இது தொடர்பாக ஆத்மிகா கூறியதாவது, "அந்தத் தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன். நான் பாலிவுட் படங்களின் ரசிகை. ஆனால் இந்தி மொழியைக் கற்க முடியவில்லை. ஆனால் தற்போது ஊரடங்கு காலத்தில் இந்தி கற்று வருகிறேன். இப்போது என்னால் இந்தி புரிந்துக்கொண்டு பதிலளிக்க முடியும்.

நல்ல வாயப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக நான்கு தோல்விப் படங்களைத் தருவது மோசமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இந்தத் துறையில் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறேன்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "வாடி புள்ள வாடி" சமூக வலைதளங்கள் அழைக்கும் ஆத்மிகாவின் புகைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details