தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மன அழுத்தம் குறைய ஆரி கொடுத்த டிப்ஸ்! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகர் ஆரி ’அறம் வளர்ப்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதத்தில் ஊக்குவித்துப் பேசியுள்ளார்.

ஆரி
ஆரி

By

Published : Aug 20, 2021, 10:34 AM IST

’ஜார் என்டர்டைன்மென்ட்’ சார்பில் ’அறம் வளர்ப்போம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான ஆரி கலந்துகொண்டார்.

அப்போது அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்டவர்களுடன் ’வாங்க பேசலாம்’ என்ற தலைப்பில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். தொடர்ந்து கரோனா காலக்கட்டத்தில் மக்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக அவர்களை ஊக்குவித்துப் பேசி, மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.

நன்கொடை பெற்றுக் கொண்ட ஆரி

அதனைத் தொடர்ந்து, ஆரி நடத்திவரும் ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்புக்கு ஜார் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தது.

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடிய ஆரி, விவசாயத்திற்காக, ‘எல்லோரும் விவசாயிகளாக மாற வேண்டும்' என்ற நோக்கத்தில் ’மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.

முன்னதாக ஜார் என்டர்டைன்மென்ட் நிறுவனம் நடத்திய ’மனம் என்னும் மந்திர சாவி’ நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷும், எல்லாம் இன்ப மயம் நிகழ்ச்சியில் ஞானசம்பந்தமும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தயாரிப்பாளர் தமிழ் மணியனை சந்தித்த பிரபல இந்தி இயக்குநர்!

ABOUT THE AUTHOR

...view details