தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஆனந்தம் விளையாடும் வீடு' படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை: கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும்’ வீடு திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் தொடங்கியது.

By

Published : Mar 16, 2021, 6:18 PM IST

கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக உருவாகும் குடும்ப திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் குடும்பம் சார்ந்த திரைப்படம் உருவாகிறது.

’ஆனந்தம் விளையாடும் வீடு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதில் கௌதம் கார்த்திக், சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில் ’ஆனந்தம் விளையாடும் வீடு‘ படத்தின் படப்பிடிப்பு நேற்று(மார்ச்.15) கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையாகப் பூஜையுடன் தொடங்கியது. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் சித்து குமார் இசையமைக்கிறார். தொடர்ந்து படத்தின் கூடுதல் தகவல் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details