மூன்றாவது முறையாக ஆமீர் கான், கரீனா கபூர் இணைந்து நடித்துவரும் படம் 'லால் சிங் சத்தா'. இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கிவரும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மோனா சிங் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான 'Forrest Gump' படத்தின் இந்தி ரீமேக்காக இப்படம் உருவாகிறது.
இப்படத்தின் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாள்களாகச் சண்டிகரில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளதாக மோனா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், 'கடினமாக உழைத்தோம், மிகச் சிறப்பாகப் பார்ட்டி கொண்டாடினோம். சண்டிகரில் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்ததாக அமிர்ஸ்டாரில் தொடங்கவுள்ளது' என்று பதிவிட்டுள்ளார்.