பாலிவுட் நடிகர் அமீர்கான் தற்போது 'லால் சிங் சத்தா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே புகழ்பெற்ற அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்ற அமீர்கான் அங்கு தரிசனம் மேற்கொண்டார்.
வெள்ளை நிற துணியை தலையில் அணிந்து பொற்கோயிலுக்குச் சென்ற அமீர்கானுக்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியிலும் அமீர்கான் கலந்துகொண்டார்.
பொற்கோயிலில் அமீர்கான் தரிசனம் 1994ல் வெளியான பாரஸ்ட் ஜிம்ப் என ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவலாக உருவாகி வரும் 'லால் சிங் சத்தா' படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். வையகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் கரீனா கபூர், விஜய்சேதுபதி, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பொற்கோயிலில் அமீர்கான் தரிசனம் 'லால் சிங் சத்தா' படத்தை 2020 டிசம்பர் 25ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...
ரொமாண்டிக் டான்ஸ் ஜோடியான சிரஞ்சீவி-குஷ்பு