பாலிவுட் நடிகர் அமீர் கான் (55), தனது லால் சிங் சத்தா திரைப்படத்தின் முக்கிய காட்சிகளைப் பாடமாக்க துருக்கி சென்றுள்ளார்.
அவர் அங்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இத்திரைப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் எடுப்பதாக இருந்த நேரத்தில், எல்லையில் இந்திய - சீனா மோதல் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் டெல்லியில் எடுக்க வேண்டிய காட்சிகளும் கரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெறவுள்ளது.
லால் சிங் சத்தா படம், ஹாலிவுட் திரைப்படமான டாம் ஹாங்க்ஸின் ரீமேக். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான நடிகர் அமீர் கான் உள்ளார்.
இதையும் படிங்க:#45YearsOfRajinism - புகைப்படத்தை வெளியிட்ட பா. ரஞ்சித்