தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உடலுக்கு கட்டுபாடு இருக்கிறது, மனதுக்கு கிடையாது - பிரித்விராஜ் - உடற்பயிற்ச்சி

சராசரி எடையை விட மிகக் குறைவான எடையில் இருக்கும் பிரித்விராஜின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

prithviraj
prithviraj

By

Published : May 28, 2020, 9:47 AM IST

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் தற்போது 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்காக 20 கிலோ எடை குறைந்து, அதிக தாடியுடன் காணப்படுகிறார் பிரித்விராஜ்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டன் நாட்டில் உள்ள பாலைவனப் பகுதிகளில் நடைபெற்றது. உலகப் பெருந்தொற்றான கரோனா காரணமாக அங்கு பல இன்னல்களை சந்தித்து இறுதியாக பிரித்விராஜ் உட்பட படக்ககுழுவினர் கொச்சி திரும்பினர். அவர்கள் தனிமைப்படுத்துதல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பிரித்விராஜ் தனது சமூக வலைதளத்தில் உடற்பயிற்சி செய்து முடித்த பின், எடுத்த புகைப்படைத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஆடுஜீவிதம் படத்தில் வெறும் உடம்போடு நடிக்க வேண்டிய காட்சிகளைப் படம்பிடித்து ஒரு மாதம் ஆகிறது. படப்பிடிப்பின் கடைசி நாளில் எனது கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் குறைந்தது. அதன் பிறகு ஒரு மாதம் உணவு, ஓய்வு, உடற்பயிற்சியால் என் உடல் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பு என்னைப் பார்த்த படக்குழுவினர் இப்போது என்னை பார்த்தால் மிகவும் ஆச்சரியப்படுவார்கள் என நினைக்கிறேன்.

எனது பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர் அஜித் பாபு, எனது நிலையை முன்பே புரிந்து அதற்கேற்றவாறு செயல்பட்டார், திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்திய ப்ளெஸ்ஸி சேட்டன் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. நினைவில் கொள்ளுங்கள் மனித உடலுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், மனித மனதுக்கு அது கிடையாது" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கொச்சி திரும்பிய 'ஆடுஜீவிதம்' பிரித்விராஜ் - மனைவி உருக்கம்

ABOUT THE AUTHOR

...view details