தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒரே ஒரு ஸ்மைலி மொத்த படமும் க்ளோஸ்: மறுத்த அருண் விஜய் - நயன்தாரா

சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' படத்தை விமர்சித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகர் அருண் விஜய் பதிலளித்துள்ளார்.

File pic

By

Published : May 19, 2019, 9:58 AM IST

'சீமராஜா' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் 'மிஸ்டர் லோக்கல்'. இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். 'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் ஒரே ஒரு ஸ்மைலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அருண் விஜய்யின் இந்த ட்வீட் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தை மறைமுகமாக விமர்சிப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டது.

அருண் விஜய் ட்விட்டர்

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அருண் விஜயின் ட்வீட்க்கு கோபமாக கமெண்டுகளை பதிவு செய்துவந்தனர். பின் பிரச்னையின் போக்கை புரிந்துகொண்ட அருண்விஜய் சில மணி நேரங்களிலே வேறொரு ட்வீட்டை பதிவு செய்தார்.

அந்தப் பதிவில் அடுத்த வாரம் என்னுடைய அடுத்த புராஜெக்ட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது. என்னுடைய கடந்த ட்வீட்டும் அது சம்பந்தமாகதான் பதிவு போட்டேன். யாரும் அதை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நான் என்னுடைய வேலையை மட்டும் பார்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "சீமராஜா" படம் தொடர்பாக நடிகர் அருண் விஜய் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா யார் மாஸ் காட்டுவது என்று ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு என்றும் தமிழ் மக்கள் திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details