தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உயிருக்குப் போராடும் மாஸ்டர் சிவசங்கர் - சிவசங்கர் நடனம்

மாஸ்டர் சிவசங்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

சிவசங்கர்
சிவசங்கர்

By

Published : Nov 25, 2021, 12:08 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநரான சிவசங்கர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடனமாடியுள்ளார்.

இவர் 'திருடா திருடி' படத்தில் நடனம் அமைத்த 'மன்மத ராசா' பாடல் இன்றும் பலரது விருப்பமான பாடல் பட்டியலில் உள்ளது. இதுதவிர கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் சிவசங்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதால் அவரது குடும்பத்தினர் சமாளிக்க முடியாமல் திணறிவருவதாக மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

அதில், "மாஸ்டர் சிவசங்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மருத்துவச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details