தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பா.இரஞ்சித்திடம் வருத்தம் தெரிவித்த 'அன்புச்செல்வன்' படக்குழு!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் அன்புச்செல்வன் படத்தின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்போம் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

v
v

By

Published : Nov 3, 2021, 6:58 PM IST

வினோத் குமார் இயக்கத்தில், போலீஸ் அலுவலராக கெளதம் மேனன் நடிக்கும் படம் 'அன்புச்செல்வன்'. இந்தப் பெயர் கெளதம் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' பட சூர்யாவின் கதாபாத்திரப் பெயராகும்.

எனவே, அன்புச்செல்வன் 'காக்க காக்க' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவன்டி ஸ்டுடியோ சார்பில் மகேஷ் தயாரிக்கும் அன்புச்செல்வன் படத்திற்கு சிவா பத்மாயன் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டரில் பதிவிட்டு கெளதம் மேனனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கெளதம் மேனன், 'இந்தப் படத்தில் நான் நடிப்பது குறித்து எனக்கே தெரியாது' என அதிர்ச்சி அளிக்கும் விதமாக ட்வீட் செய்தார். மேலும் அந்த இயக்குநரை எனக்கு தெரியாது எனவும்; தான் அவரை சந்திக்கைவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அன்புச்செல்வன் பட போஸ்டர்

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித் அப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார். இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதைவைத்து பா.இரஞ்சித்தையும் கெளதம் மேனனையும் கலாய்த்து கருத்துப் பதிவிட்டனர்.

இதையடுத்து அன்புச்செல்வன் படக்குழுவினர் இந்தக் குழப்பத்தைப் போக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "இயக்குநர் கெளதம் மேனனின் ட்விட்டர் பதிவு குறித்து, இயக்குநர் பா.இரஞ்சித்திடம் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வளரும் கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் செய்த இந்தச் செயல், தற்போது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பா.இரஞ்சித் அவர்களுக்கும் இதற்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அன்புச்செல்வன் படத்தின் மக்கள் தொடர்பாளர்கள் சுரேஷ், தர்மதுரை ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டார்.

எனவே, இனி 'அன்புச்செல்வன்' ஃபர்ஸ்ட் லுக் விவகாரம் தொடர்பாக, இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களது பெயரை சேர்க்க வேண்டாம், என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

அதே சமயம், வளர்ந்து வரும் எங்களுக்கு கைகொடுக்க நினைத்து உதவிய இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு, எங்களால் இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்காக, அன்புச்செல்வன் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புசெல்வன் பட போஸ்டர்

செவன்டி எம்எம் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர் எம்.மகேஷ், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டின் மூலம் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பார்.

கெளதம் வாசுதேவ் மேனன் சாரின் எபிசோடுகள் அடங்கிய இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஏற்கனவே முடிவடைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி கொடுத்த பா.இரஞ்சித்: ஷாக்கான கெளதம் மேனன்

ABOUT THE AUTHOR

...view details