இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கோலிவுட் கடந்து பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் புகழ்பெற்றவராகத் திகழ்ந்து வருகிறார். இவர் '99 சாங்ஸ்' என்ற இந்திப் படத்துக்கு இசையமைத்து தயாரித்திருப்பதுடன் திரைக்கதையும் எழுதியுள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்! - ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
ஏ.ஆர் ரஹ்மான் தயாரிப்பில் வெளியாகும் '99 சாங்ஸ்' திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக காஷ்மீரைச் சேந்த இஹான் பட் நடித்துள்ளார். சிரமப்படும் பாடகன் ஒருவன் தான் யார் என்பதை உணர்ந்து இசையமைப்பாளராக விரும்புவதை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் 14 பாடல்கள் உள்ளன. இந்தப் படம் இன்று (ஏப்ரல் 16) திரைக்கு வந்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மானின் முதல் தயாரிப்பான இசையுடன் இணைந்த0 காதல் கதையான இந்த ‘99 சாங்ஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் வெற்றிபெற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.