தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பழைய - புதிய உலகங்களுடனான மனிதனின் போராட்டமே '99 சாங்ஸ்' - ஏ.ஆர். ரஹ்மான்! - 99 சாங்ஸ் ட்ரெய்லர்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து தயாரித்து உருவாகியுள்ள '99 சாங்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

arrahman
arrahman

By

Published : Mar 23, 2021, 4:31 PM IST

Updated : Mar 23, 2021, 6:52 PM IST

கோலிவுட்டைச் சேர்ந்த இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் புகழ்பெற்றவராகத் திகழ்ந்து வருகிறார். இவர் '99 சாங்ஸ்' என்ற இந்திப் படத்துக்கு இசையமைத்து தயாரித்திருப்பதுடன் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இப்படத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்குகிறார். இதில் ஹீரோவாக காஷ்மீரை சேந்த இஹான் பட் நடிக்கிறார். சிரமப்படும் பாடகன் ஒருவன் தன்னை உணர்ந்து இசையமைப்பாளராகத் துடிக்கிறான். இப்படத்தில் 14 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படமானது ஏப்ரல் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் முதல் தயாரிப்பான இசையுடன் இணைந்த இந்த காதல் கதையான 99 சாங்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

திரைப்படம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், “என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம். மூவிஸ் ஐடியல் என்டெர்டெயிண்மெண்ட் சார்பாக இந்த பரீட்சார்த்தமான திரைப்படத்திற்காக ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. பழைய - புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே '99 சாங்ஸ்'-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான இஹான் பட், எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மணிஷா கொய்ராலா, லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள், ரஞ்சித் பாரோட், ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.

Last Updated : Mar 23, 2021, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details