எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் சி.பிரேம்குமார் இயக்கி, விஜய் சேதுபதி , திரிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 96. இந்த படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகனையும், அத்திரைப்படம் அவர்களின் பள்ளி பருவத்திற்கே அழைத்துச் சென்றது என்றால் அதுமிகையல்ல. இதனால் அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசை பக்கபலமாக அமைந்தது.
'96' தெலுங்கு ரீமேக்: முதல் முறை ஜோடி சேரும் ஷர்வானந்த-சமந்தா - ஷர்வானந்த்
பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த், சமந்தா நடிக்க உள்ளனர்.

'96' தெலுங்கு ரீமேக்: முதல் முறை ஜோடி சேரும் ஷர்வானந்த-சமந்தா
இந்நிலையில், இந்தப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். தமிழில் '96' படத்தை இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்க உள்ளார்.
இதில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்தனும், த்ரிஷா கதாப்பாத்திரத்தில் சமந்தாவும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மாலத்தீவில் நடந்துவருகிறது.