தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'96' கிளைமாக்ஸ்! ரசிகர்களின் விருப்பத்தை மேடையில் நிறைவேற்றிய ராம்-ஜானு - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட்டான '96' படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் ராமுவும், ஜானுவும் கட்டிப்பிடித்து காதலில் உறைந்து,ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினர்.

ரசிகர்கள் விரும்பத்தை மேடையில் நிறைவேற்றிய ராம் - ஜானு

By

Published : Feb 5, 2019, 8:50 PM IST

கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் லிஸ்டில் இடம்பெற்ற படம் '96'. ரொமாண்டிக் திரைப்படமான இதில் பள்ளிப் பருவ காதல், அவர்களின் பிரிவு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கும்போது ஏற்படும் உணர்ச்சி பரிமாற்றங்களை எதார்த்தமாக காட்டப்பட்டிருந்தது.

படத்தில் ராம்-ஆக தோன்றிய விஜய் சேதுபதியும், ஜானு-வாக தோன்றிய திரிஷாவும் இணைந்து வெளிப்படுத்திய நடிப்பு அனைவரும் வெகுவாகக் கவர்ந்தது. இந்த இருவருக்கிடையேயான வார்த்தைப் பரிமாற்றங்கள் வாட்ஸ்அப், ஷேர் சாட் என பல சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸாக இன்றளவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அந்த அளவுக்கு இவர்களுக்குள் காட்டப்பட்டிருந்த காதல் மீது, படத்தை பார்ப்பவர்களுக்கே தனிவிதமாக காதலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இப் படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், 'ஒரு தடவையாவது கட்டிப்பிடித்துகொள்ள மாட்டார்களா என படம் முழுவதும் நம்மை ஏங்க வைத்த ராம் - ஜானு, இப்போது நம் அனைவரும் முன்னிலையில் கட்டிப்பிடிப்பார்கள் என்று கூறினார்.

இதையடுத்து, விஜய் சேதுபதியும், திரிஷாவும் மேடைக்கு வந்த நிலையில், இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். மேலும் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, இதுதான் படத்தின் கிளைமாக்ஸ் என்று விஜய் சேதுபதி குறிப்பிட்டார். அப்போது பலத்த கரகோஷங்கள் எழுந்தன.

ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த காட்சியை நிஜத்தில் நிகழ்த்தி காட்டிய இந்த நிகழ்வு 100வது நாள் விழாவை பெரிதும் சிறப்பாக்கியது.

ABOUT THE AUTHOR

...view details