'கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'ஒத்த செருப்பு'. இந்தப்படத்தின் சிறப்பு என்னவென்றால் பார்த்திபன் தனி ஆளாக நடித்து புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதுபோன்று உலக சினிமாவில் 12 படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. அந்த பன்னிரெண்டிலும் இல்லாத சிறப்பு ஒத்த செருப்பில் இருக்கிறது.
எழுத்து, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பார்த்திபன் ஒருவரே நிகழ்த்திக் காட்டியுள்ளார். 'ஒத்த செருப்பு' படம் வெளிவந்தால் இந்த பன்னிரெண்டு படங்களை பின்னுக்குத் தள்ளி முதல் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் பார்த்திபன் இப்படத்திலும் அதே முயற்சியை மேற்கொண்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இவரது உலக சினிமா பார்வை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகவே இருக்கும். ஒத்த செருப்பு திரைப்படத்தின் முன்னோட்டம் மே மாதம் வெளியாகி ரசிகர்களின் சினிமா பார்வையை வேறு கோணத்தில் மாற்றியுள்ளது. இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் வழங்கியிருப்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பார்த்திபன், த்ரில்லர் கதையாக தனி வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட 'ஒத்த செருப்பு' மனிதனை காண நானும் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.