நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா, பல ஆண்டுகளுக்கு பிறகு 36 வயதினிலே எனும் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து, மகளிர் மட்டும், காற்றின் மொழி, நாச்சியார் என பெண்களை மையப்படுத்தும் கதைகளில் நடித்து வருகிறார்.
ஜோதிகாவுடன் மோதும் 'ரெமோ' வில்லன்! - karthi
நடிகை ஜோதிகா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ரெமோ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நடிக்கவுள்ளார்.
தற்போது மூன்று புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். எஸ்.ராஜ் எனும் அறிமுக இயக்குநரின் படம், குலேபகாவலி படப்புகழ் கல்யாண், பாபநாபம் இயக்குநர் ஜித்து ஜோசப் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இதில் ஜித்து ஜோசப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜோதிகா உடன் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ரெமோ படப்புகழ் மலையாள நடிகர் அன்சன் பால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் ஸ்மார்ட் வில்லன் கேரக்டரில் வந்து அசத்தியிருப்பார். சமீபத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 90 எம்எல் படத்தில் ஓவியாவின் பாய்பிரண்ட் கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.