சென்னை: சக்ரி சொலிட்டி இயக்கத்தில் அஜித், பார்வதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் ‘பில்லா 2’. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வந்த படம் ‘பில்லா 2’. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும், பலருக்கும் இந்தப் படம் பிடித்திருந்தது. பின்னாட்களில் இப்படம் குறித்து சிலாகித்து எழுதினர். அல்பசினோ நடித்த ‘ஸ்கார்ஃபேஸ்’ எனும் படத்தின் சொல்லப்படாத ரீமேக்தான் பில்லா 2. அஜித் தனது நடிப்பால் அதற்கு நியாயம் செய்திருப்பார்.
இந்தப் படத்தில் வசனங்கள் எல்லாம் ஷார்பாக இருக்கும். எனக்கு நண்பனா இருக்க தகுதி வேணாம், எதிரியா இருக்க தகுதி வேணும்; என் வாழ்நாள்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா... இப்படி பல வசனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
பில்லா 2 படத்தின் மற்றொரு முக்கியமான ப்ளஸ் யுவனின் இசை. தன்னைத்தானே செதுக்கியவன், ஏதோ ஒரு மயக்கம் ஆகிய பாடல்கள் இளைஞர்கள் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்தப் படத்தின் மூலம்தான் வித்யூத் ஜம்வால் தமிழுக்கு அறிமுகமானார். பின்னர் ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றார்.
இதையும் படிங்க:நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்..!