கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ள படம் ‘83’. 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வென்றதை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைந்துள்ளது.
83 திரைப்படம்: முதற்கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்! - indian cricket
கபில் தேவ் தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வென்றது பற்றிய கதையான ‘83’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர்களாக நடிக்கவுள்ள அனைவரும் கடந்த எட்டு மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டனர். தற்போது இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்புக்காக ‘83’ படக்குழுவினர் மும்பை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றனர். லண்டனில் நான்கு மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாவும், படத்துக்கான அத்தனை அங்கீகாரமும் இயக்குநர் கபீர் கானை சேரும் எனவும் படத்தின் நாயகன் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.