தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எட்டு தோட்டாக்கள்' வெற்றியின் புதிய படம்! - அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் புதியப்படம்

சென்னை: விளம்பர கமர்சியல்களை இயக்கிய ஷ்யாம் மனோகரன், 'எட்டு தோட்டாக்கள்' பட நடிகர் வெற்றியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

vetri
vetri

By

Published : Apr 19, 2021, 12:28 PM IST

அறிமுக இயக்குநர் ஷ்யாம் மனோகரன் இயக்கத்தில் 'எட்டு தோட்டாக்கள்' படத்தின் நடிகர் வெற்றி நடிப்பில், புதிய படம் ஒன்று தயாராகவுள்ளது. இந்தப் படத்தை பிக்சர்ஸ் பாக்ஸ் கம்பெனி சார்பில் அலெக்ஸாண்டர் தயாரிக்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஷ்யாம் மனோகரன் கூறியதாவது: ”இது வரை பல வகையிலான விளம்பர கமர்சியல்களை இயக்கியுள்ளேன். ஆனால் எப்போதும் என்னுடைய கனவு, திரைப்படத்தை இயக்குவதாகவே இருந்தது. திரைக்கதையை எழுதி முடித்த பிறகு புதுமையான முயற்சிகளை அங்கீகரிக்கும், ஒரு நல்ல தயாரிப்பாளரை தேடினேன். அந்த வகையில், 'இறைவி', 'கருப்பன்' என தரமான படங்களை விநியோகம் செய்த, இளமையும் திறமையும் வாய்ந்த தயாரிப்பாளர் அலெக்ஸாண்டரை அணுகினேன்.

முழு திரைக்கதையை தயாரிப்பாளரிடம் கூறியதும் அவர் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். . இப்படத்தில் முதன்மை பாத்திரத்திற்கு என்னுடைய முதல் தேர்வாக இருந்தவர் நடிகர் வெற்றி. தரமான படங்களில் பரிசோதனை பாத்திரங்களில் நடித்து, தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்தவர். அவருக்கும் திரைக்கதை வெகுவாக பிடித்திருந்தது. உடனடியாக நடிப்பதற்கு ஒப்புகொண்டார். இளமையும் திறமையும் வாய்ந்த நடிகர், தயாரிப்பாளர் என் முதல் படத்திற்கு அவர் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

இவரைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அலெக்ஸாண்டர் கூறியதாவது: ”திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் விருப்பங்கள் குறித்து ஓரளவு பரிச்சயம் உண்டு. இயக்குநர் ஷ்யாம் திரைக்கதையை விவரித்தபோது திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது புரிந்தது. புத்தம் புதிதான கதையாக நாம் இதுவரை பார்த்திராத படமாக இதன் திரைக்கதை இருந்தது.

மிஸ்டரி படங்களில் எப்போதும் க்ளைமாக்ஸில் தான் சீட்டின் நுனியில் வைத்திருக்கும் பகுதிகள் இருக்கும். ஆனால் ஷ்யாம் திரைக்கதையில் ஆரம்பத்தில் இருந்தே அம்மாதிரி பகுதிகள் இருப்பதை அறிந்தேன். முதன்மை கதாபாத்திரம் குறித்து எங்களது இருவரது தேர்வும் ஒன்றாகவே இருந்தது. மிகக் குறைவான காலத்தில் கதைகளுக்கான ஹீரோவாக தன்னை அடையாளப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார், நடிகர் வெற்றி.

கோடைக்காலம் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். தற்போது படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் தொழில் நுட்பக் குழுவினரை இறுதி செய்யும் பணியில் உள்ளோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details